(செல்வி வினாயகமூர்த்தி)

“க்ளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் ஆலையடிவேம்பு பிரதேச சபையும் இணைந்து விசேட தூய்மைப் பணியை இன்று (08) சனிக்கிழமை முன்னெடுத்தன.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நாவற்காடு சிவலிங்கம் கடை வீதி வடிகால் மற்றும் அதனோடு. சூழவுள்ள பகுதிகளும் தூய்மைப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டது.
காலை 8.00 மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் வேலைத்திட்டத்தின் நோக்கம் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது. பின்னர் வடிகால் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளை சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன

இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுனில் சுனில் திசாநாயக்க ஆலையடிவேம்பு பிரதேச செயலக செயலாளர் ஆர். திரவியராஜ், பிரதேச சபை தவிசாளர் ஆர். தர்மதாச, உப தவிசாளர் க. ரகுபதி, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள்,உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தூய்மையான மற்றும் சுகாதாரமான சூழலை உருவாக்குவதில் பொதுமக்களின் பங்களிப்பின் அவசியம் வலியுறுத்தப்பட்டதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இவ்வாறான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதன் முக்கியத்துவமும் எடுத்துரைக்கப்பட்டது.