அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம் ; அன்னையவளின் திருமாங்கல்யத்துக்கான திருப்பொன் உருக்கும் நிகழ்வு
நிகழும் மங்களகரமான பராபவ வருடம் ஆனி திங்கள் சுக்கிரவாரம் 26.06.2026 (வெள்ளிக்கிழமை) விசாக நட்சத்திரமும் சித்தயோகமும் மிதுன லக்கினமும் கூடிய காலை 9.35 மணி முதல் 10.20 மணி வரை உள்ள சுபமுகூர்த்த வேளையில் அன்னையவளின் திருப்பொன் உருக்கல் நிகழ்வு நடைபெறும்.
அன்னையவளின் பொன்னுருக்கலில் கலந்து கொள்வது பூர்வபுண்ணியமாகும். இத்தெய்வீக கைங்கர்யத்தில் நாமும் இயன்ற பங்களிப்பினை பொன் பொருளாக வழங்கி இறையருளை பெற அன்புடன் அழைக்கின்றார்கள் இவ்வண்ணம் ஆலய பரிபாலன சபையினர்



