கல்முனை உவெஸ்லி உயர்தர (தேசிய) பாடசாலையில் நீண்டகாலம் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி, பின்னர் இடமாற்றம் பெற்றுச் சென்றவர்களையும் ஓய்வுபெற்றவர்களையும் கௌரவிக்கும் சேவை நலன் பாராட்டு விழா, பாடசாலை அதிபர் திரு. கலையரசன் அவர்களின் தலைமையில் 06.08.2026 அன்று சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில், இப்பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றிய பின்னர் தமிழ் கோட்டத்தில் ஆசிரிய ஆலோசகராகச் சேவையாற்றி அண்மையில் ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் திரு. கா. சாந்தகுமார் அவர்களும், திரு. எஸ். சிவாகரன், திரு. எம்.எஸ்.எம். யசார், திரு. பெ. ரஞ்சன், திரு. எம். தஸ்ருப், திருமதி மர்சுதா சமட், திரு. எஸ். ருசிகரன், திரு. பி. ஜீவரெத்னம், திரு. எம்.வி.எஸ். றஜாத் மற்றும் திரு. எம்.எம். ஜெம்ஸித் ஆகியோரும் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் உற்சாகமாகப் பங்கேற்றதுடன், மாணவர்களின் பல்வகைக் கலைநிகழ்ச்சிகள் விழாவிற்கு மேலும் சிறப்பூட்டின. கௌரவிக்கப்பட்டவர்களின் அர்ப்பணிப்பான சேவையை நினைவுகூர்ந்து, அவர்களின் எதிர்கால வாழ்விற்கும் பணிகளிற்கும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.

இந்நிகழ்வு, சேவையை மதிக்கும் பண்பையும் கல்விச் சமூகத்தின் ஒற்றுமையையும் வெளிப்படுத்திய அர்த்தமிக்க நிகழ்வாக அமைந்தது.