45ஆவது தேசிய இளைஞர் விருதுவிழாவை முன்னிட்டு 08 தேசிய போட்டித் தொடர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன…!
25 மாவட்டங்களுக்கு 25 மாவட்ட இளைஞர் விருதுவிழாக்கள் மற்றும் ஒரு தேசிய விருதுவிழா…!
National Youth Services Council ஏற்பாடு செய்யும் 45ஆவது தேசிய இளைஞர் விருதுவிழா – 2026-ஐ முன்னிட்டு, 08 தேசிய போட்டித் தொடர்களின் கீழ் 87 போட்டிப் பிரிவுகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்படுகின்றன.
இலங்கையின் இளைஞர்களிடம் உள்ள கலை, இலக்கிய, படைப்பாற்றல் மற்றும் புதுமைத்திறன்களை தேசிய மட்டத்தில் அடையாளம் கண்டு கௌரவிப்பதே இந்நிகழ்ச்சித் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்த ஆண்டிற்கான போட்டிகளில், 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இலங்கை இளைஞர், யுவதிகள் விண்ணப்பிக்கலாம். நாடு முழுவதும் உள்ள திறமையான இளைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி தேசிய மட்டத்தில் அங்கீகாரம் பெறுவதற்கான சிறப்பான வாய்ப்பாக இது அமைகிறது. இப்போட்டிகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பங்கேற்கலாம்.
இம்முறை போட்டித் தொடர்களில் பின்வரும் பிரிவுகள் இடம்பெறுகின்றன:
“Melody” – இசைப் போட்டி
“Steps” – நடனப் போட்டி
“Young Voices” – பேச்சு மற்றும் அறிவிப்பாளர் (Anchoring/Presentation) போட்டி
“NovaMind” – செயற்கை நுண்ணறிவு (AI) படைப்புப் போட்டி
“Inkspire” – இலக்கியப் போட்டி
“Shutter Stories” – புகைப்படப் போட்டி
“Dream Canvas” – ஓவியப் போட்டி
“Beyond Limits” – மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கான சிறப்பு போட்டி
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் nysc.lk/youthawards இணையதளத்தில் நுழைந்து ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
பதிவு நிறைவடைந்த பின்னர் கிடைக்கும் பதிவு உறுதிப்படுத்தல் படிவத்தை போட்டி நடைபெறும் இடத்திற்கு கொண்டு வர வேண்டும். படைப்புகளை சமர்ப்பிக்க வேண்டிய போட்டிப் பிரிவுகளுக்கான படைப்புகள், அந்தப் பதிவு படிவத்துடன் சேர்த்து 2026 செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், மகரகம தலைமை அலுவலகத்தின் கலைத்திறன் பிரிவிற்கு ஒப்படைக்கப்பட வேண்டும்.
போட்டி கால அட்டவணை
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் காலம் – 2026 ஜூன் 20 முதல் ஜூலை 30 வரை
பிரதேச செயலக பிரிவு மட்டப் போட்டிகள் – 2026 ஆகஸ்ட் 01 முதல் ஆகஸ்ட் 30 வரை
மாவட்ட மட்டப் போட்டிகள் – 2026 ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 30 வரை
படைப்புகள் சமர்ப்பிக்கும் இறுதி நாள் – 2026 செப்டம்பர் 10
தேசிய மட்டப் போட்டிகள் – 2026 அக்டோபர் 01 முதல் நவம்பர் 30 வரை
தேசிய மட்டத்தில் வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு 45ஆவது தேசிய இளைஞர் விருதுவிழாவில் தேசிய விருதுகள், சான்றிதழ்கள் மற்றும் பணப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
இந்த ஆண்டைய தேசிய இளைஞர் விருதுவிழாவில் பல முக்கிய புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன் படி, முதன்முறையாக 25 மாவட்ட இளைஞர் விருதுவிழாக்கள் நடத்தப்படுகின்றன. மேலும், பிரதேச மட்ட மாவட்ட மற்றும் தேசிய மட்டங்களில் வெற்றி பெறும் போட்டியாளர்களுக்காக திறமையாளர் குழு (Talent Pool) அடிப்படையிலான பயிற்சி நிகழ்ச்சிகளும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
மேலும் தகவல்களுக்கும்
ஆன்லைன் விண்ணப்பங்களுக்கும்:
🌐 nysc.lk/youthawards
இத் தகவலை உங்களின் பாடசாலை மாணவர்கள், கலைக்கழக அங்கத்தவர்கள் , சமய கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் போன்றோர்களிடம் உடன் தெரியப்படுத்தி அவர்களை விண்ணப்பிக்க செய்யுங்கள்.
தி.மோகனராஜ்
இளைஞர் சேவை உத்தியோகத்தர்
பிரதேச செயலகம்
கல்முனை வடக்கு
0752933133
