விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியத் தொகை ஒரு ஹெக்டேயருக்கு 30,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை அறிவித்த அவர், இதுவரை 25,000 ரூபாவாக வழங்கப்பட்ட மானியம் 5,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறினார். புதிய மானியத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ஒரே தடவையில் நேரடியாக வரவு வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த யால பருவத்தில் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடையவுள்ளதாகவும், இதற்காக அரசாங்கம் 10,947 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், சந்தை விலையில் மாற்றங்கள் ஏற்பட்டாலும், ஒரு மூட்டை யூரியா உரத்தை 10,200 ரூபா என்ற நியாயமான விலையில் தொடர்ச்சியாக வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.