கல்முனை மண்ணின் இளம் ஆன்மீகச் சொற்பொழிவாளரான நாகராஜா சனாதனன் அவர்கள், சுவிட்சர்லாந்தில் நடைபெறும் துர்க்கை அம்மன் ஆலய மகோற்சவத்தில் சிறப்புச் சொற்பொழிவாளராக பங்கேற்கும் பொருட்டு ஐரோப்பா பயணம் மேற்கொள்கிறார்.

சுவிட்சர்லாந்தில் 12 நாட்கள் ஆன்மீகச் சொற்பொழிவுகளை நிகழ்த்தவுள்ள அவர், அதனைத் தொடர்ந்து நார்வே நாட்டிலுள்ள சிவன் ஆலயத்திலும் சிறப்புச் சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தவுள்ளார்.

நாகராஜா சனாதனன் அவர்கள் இலங்கையின் பல்வேறு புகழ்பெற்ற இந்து ஆலயங்களில் ஆன்மீகச் சொற்பொழிவுகள் நிகழ்த்தி, பக்தர்களின் பாராட்டைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இளம் வயதிலேயே ஐரோப்பிய நாடுகளுக்கு ஆன்மீகச் சொற்பொழிவிற்காக அழைக்கப்படும் இலங்கையர்களில் ஒருவராக அவர் திகழ்வது பெருமைக்குரிய சாதனையாகும். இதற்கு முன்னர் கம்பபாரதி ஜெயராஜ் ஐயா, திருமுருகன் ஐயா போன்ற அனுபவம் மிக்க மூத்த ஆன்மீகப் பேச்சாளர்கள் மட்டுமே இவ்வாறான அழைப்புகளைப் பெற்றிருந்த நிலையில், அந்த வரிசையில் கல்முனை மண்ணைச் சேர்ந்த ஒரு இளம் பேச்சாளர் இணைவது எமது சமூகத்திற்கு பெருமை சேர்க்கும் நிகழ்வாகும்.

அவரது ஆன்மீகப் பணிகள் மேலும் வளர்ச்சியடைந்து, உலகெங்கும் தமிழ் சைவ சமயப் பணியை சிறப்பாக முன்னெடுக்க இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

நாகராஜா சனாதனன் அவர்களுக்கு கல்முனைநெட் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்!