செல்லையா பேரின்பராசா 

அகில இலங்கை பொது ஊழியர் சங்கம் ஏற்பாடு செய்து நடாத்திய மேதினக் கூட்டம் 01.05.2026 கல்முனை ஜெயா விருத்தினர் விடுதியில் இத் தொழிற்சங்கத் தலைவர் எஸ்.லோகநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் ,  பொறியியயலாளரும் இச் சங்கத்தின் ஆலோசகருமான வி.ரி.சம்பந்தன்,  ஓய்வுநிலை அதிபர் செல்லையா பேரின்பராசா ஆகியோர் முறையே பிரதம,  கௌரவ,  சிறப்பு அதிதியாக கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வில்  இத் தொழிற்சங்கத் தலைவர் எஸ்.லோகநாதன் முன்னாள் செயலாளர் எம். ஏ.வஹாப் ஆகியோர் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.