கல்முனை மாநகர் ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்த அலங்கார உற்சவம் 03.08.2026 நாளை திங்கட்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகி ஆடி 27ம் நாள் 12.08.2026 புதன்கிழமை தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவு பெறும்.

எனவே பக்த அடியார்கள் அனைவரும் எம்பெருமானின் அலங்கார உற்சவத்தில் கலந்து கொண்டு ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையாரின் இஷ்டசித்தி அருளைப் பெற்றுய்யுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றார்கள்.

03.08.2026 திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு விநாயகர் வழிபாடும், கொடியேற்றமும் நடைபெறும்.

பி.ப. 3.00 மணிக்கு விநாயகப் பெருமானுக்கு ஸ்நபன அபிஷேகம் தொடர்ந்து மூலமூர்த்திகள் பூஜைகள் விசேட வசந்த மண்டபப் பூஜைகள் நடைபெற்று விநாயகப் பெருமான் அலங்காரத்துடன் ஆலய உள் வீதி, வெளி வீதி வலம் வருவார்.

12.08.2026 அன்றைய தினம் காலை மூல மூர்த்திகள் அபிஷேகப் பூஜைகள் நடைபெற்று விநாயகப் பெருமான் சமுத்திர தீர்த்தத்திற்கு எழுந்தருளுவார். பின் ஆலயம் வந்து கொடியிறக்கம் நடைபெற்று விசேட பூஜைகள், திருவுஞ்சல் என்பன இடம்பெறும்.

12.08.2026 அன்றைய தினம் காலையில் ஆலயத்தில் அன்னதானம் இடம்பெறும் (பொதுமக்களின் ஆதரவுடன்).

13.08.2026 வியாழக்கிழமை காலை விநாயகப் பெருமானுக்கு பிராயச்சித்த அபிஷேகம் நடைபெற்று இரவு 7.00 மணிக்கு வைரவர் பூசை நடைபெற்று விநாயகப் பெருமான் ஆடி அமாவாசை தீர்த்தத் திருவிழா இனிதே நிறைவுறும்.