உதவிகள் பலவிதம் இதில் காலம், நேரம், தேவை அறிந்து உதவுவது என்பது சரியான திட்டமிடல்.
டித்வா புயலின் தாக்கத்தில் பதுளை மாவட்டம் பாதிக்கப்பட்டது. அதில்  பசறை தமிழ்த் தேசிய பாடசாலையும்  ஒன்று.
கல்முனை ஆதரவைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்கு நிவாரணம் வழங்கும் திட்டம் நடைமுறையானது.


இதில் நிதி சேகரிப்பு 13 லட்சங்கள் பெறப்பட்டு அன்றைய சூழ்நிலையில் இடமும் தேவையும் தெரிவு செய்யப்பட்டு காலத்திற்கு ஏற்ப உதவியை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இம்மாதம் 25 ஆம் திகதி பணிப்பாளர் தலைமையிலான ஒரு குழுவினர் பசறை தேசிய பாடசாலைக்கு சென்று சேவையாளர்களின் உதவியுடன் கட்டிடம் ஒன்றை முழுமையாக திருத்தி பாடசாலை நிர்வாகத்திற்கு பாவனைக்காக கையளித்துள்ளனர். சேகரிக்கப்பட்ட நிதியை 100% பயன்பெற வைத்த பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் அவர்களின் வெளிப்படையான மனதை நெகிழ வைக்கும் பேச்சு இங்கே.

https://www.facebook.com/share/v/1EGbEWK8V3