ஈரானின் உயர்மட்ட இராணுவத் தலைமையகமான காதம் அல்-அன்பியா (Khatam al-Anbiya), ஈரானிய கப்பலை கைப்பற்றிய அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை “போர்நிறுத்த மீறல்” என்று அழைத்துள்ளது.
அமெரிக்கா விதித்துள்ள ஹோர்முஸ் நீரிணை கடல்வழி முற்றுகையை மீற முயன்ற ஈரானியக் கொடியுடன் வந்த சரக்குக் கப்பலை அமெரிக்கப் படைகள் இடைமறித்துத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சற்று முன்னர் அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சோஷியல் பதிவிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கப் படைகள் அந்தச் சரக்குக் கப்பலுக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்தும், அது முற்றுகைப் பகுதியைத் தாண்டிச் செல்ல முயன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, கப்பல் நிறுத்தப்படாததால், அமெரிக்கப் படைகள் அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், “கப்பலின் எஞ்சின் அறை (Engine Room) மீது துல்லியமாகத் துளையிடும் வகையில் தாக்குதல் நடத்தி, அந்த இடத்திலேயே கப்பலை நகர முடியாமல் முடக்கினோம்” என ட்ரம்ப் விவரித்துள்ளார்.
இந்நிலையில், “கப்பலின் எஞ்சின் அறை (Engine Room) மீது துல்லியமாகத் துளையிடும் வகையில் தாக்குதல் நடத்தி, அந்த இடத்திலேயே கப்பலை நகர முடியாமல் முடக்கினோம்” என ட்ரம்ப் விவரித்துள்ளார்.
tamilwin