2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி, ஈஸ்டர் ஞாயிறு அன்று இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கின.

  • கொழும்பு அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு செபஸ்தியார் தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம்.ஷாங்கிரி-லா, சின்னமன் கிராண்ட் மற்றும் கிங்ஸ்பரி ஆகிய சொகுசு விடுதிகள் ஆகிய இடங்களில் தாக்குதல்கள் இடம் பெற்றன.

இதில் 269 பேர் கொல்லப்பட்டனர்; 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த பயங்கரவாத தாக்குதலில் சஹ்ரான் ஹாசிம் தலைமையிலான அடிப்படை மதவாத பயங்கரவாதக்கும்பல்கள் நேரடியாக ஈடுபட்டதாக விசாரணைகள் தெரிவித்தன.

இந்தத் தாக்குதல்கள் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணைகள் இன்றும் தொடர்ந்து வருகின்றன