Screenshot

துபாய் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: பயணிகள் வெளியேற்றம் !

ஈரானின் பலிஸ்டிக் ஏவுகணைகள் துபாய் சர்வதேச விமான நிலையத்தைத் தாக்கியுள்ளன. விமான நிலைய முனையத்தின் உட்புறத்தில் இருந்து வெளியாகியுள்ள புகைப்படங்கள் மற்றும் காணொளிகளில் கடும் புகையும், சேதங்களும் ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தாக்குதலைத் தொடர்ந்து விமான நிலையத்திலிருக்கும் பயணிகள் மற்றும் ஊழியர்களை அவசரமாக வெளியேற்றும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தத் தாக்குதலினால் ஏற்பட்டுள்ள உயிர்ச் சேதங்கள் அல்லது முழுமையான பாதிப்புகள் குறித்து ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் இதுவரை உத்தியோகபூர்வமாக எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை.