🔴 பாதுகாப்பு அமைச்சகத்தின் பிரதிநிதி, கட்டார் நாட்டின் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களின் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மொத்தம் 65 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 12 ட்ரோன்கள் தொடர்ச்சியான அலைகளாக வந்ததாக உறுதிப்படுத்தினர்.

அதில், 63 ஏவுகணைகள் மற்றும் 11 ட்ரோன்கள் அவை குறிவைத்த இலக்குகளை அடைவதற்கு முன்பே வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தப்பட்டன.

பாதுகாப்பு அமைச்சகத்தின் பிரதிநிதி நாசர் அல் குபைசி கூறியதாவது, 2026 பிப்ரவரி 28 ஆம் தேதி சனிக்கிழமை காலை 11:39 மணிக்கு ஏவுகணைகள் கண்டறியப்பட்ட முதல் சம்பவம் நிகழ்ந்தது. அச்சுறுத்தல் கண்டறியப்பட்டவுடன் உடனடியாக சமாளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.