எச்சரிக்கை: அடுத்த 12 மணித்தியாலங்களில் ‘ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக’ வலுவடைகிறது – பல மாகாணங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!
தென்கிழக்கு வங்கக்கடல் பிராந்தியத்தில், இலங்கைக்கு தென்கிழக்கே நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுவடைந்து வருகிறது. நேற்று (07) நிலவரப்படி, இது பொத்துவில் நகரிலிருந்து சுமார் 570 கி.மீ தொலைவில், வட அகலாங்கு 5.0°N மற்றும் கிழக்கு நெட்டாங்கங்கு 86.8°E இல் மையம் கொண்டுள்ளது.
முக்கிய தகவல்கள்:
நகர்வு: இது அடுத்த 36 மணித்தியாலங்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இலங்கையின் கிழக்குக் கரையை நோக்கி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த 12 மணித்தியாலங்களில் இது ‘ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக’ (Deep Depression) மேலும் தீவிரமடையக்கூடும்.
பாதிக்கப்படும் பகுதிகள்: இதன் காரணமாக இன்று வியாழக்கிழமை (08) முதல் நாட்டின் பல பகுதிகளில் மழை நிலைமை அதிகரிக்கும். குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மிக பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடல்சார் தொழிலாளர்கள் மற்றும் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும், வானிலை அவதானிப்பு நிலையத்தின் அறிவிப்புகளைத் தொடர்ந்து பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
