புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் 2026 ஆம் ஆண்டிற்கான பாடநெறிகள் கல்முனை வடக்கு கலாச்சார மத்திய நிலையத்தில் வருகின்ற பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன…
கலாசார மத்திய நிலையத்தில் பரதநாட்டியம்,கர்நாடக சங்கீதம்,வாத்திய இசைக்கருவிகள் இசைத்தல் போன்ற பாடநெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.அத்துடன்
வாத்திய இசைக்கருவிகளான வயலின்,வீணை,புல்லாங்குழல்,மிருதங்கம்,
கடம், கஞ்சிரா போன்ற பல இசைக்கருவிகள் தொடர்பான பயிற்சி நெறிகளும் நடைபெறும்.
இப் பாடநெறிகளை கற்பதனால் மாணவர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மைகள்:-
- பாட நெறிகளை பூர்த்தி செய்ததும் வருட இறுதியில் அமைச்சினால் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
- உயர் கல்வியினை பெறுவதற்கும் பல்கலைக்கழகம் மற்றும் தொழில் வாய்ப்பினை பெறுவதற்கும் உதவும்.
- அமைச்சினால் நடாத்தப்படும் போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு களம் உருவாகும்.
- அமைச்சினால் வருடந்தோறும் நடாத்தப்படுகின்ற “பிரதீபா” போட்டிகளில் வெற்றிபெறுபவர்களுக்கு மாகாண மட்ட மற்றும் தேசிய மட்ட சான்றிதழ்கள் வழங்கப்படும்.
- அமைச்சினால் நடாத்தப்படும் கருத்தரங்கு மற்றும் பயிற்சிப்பட்டறைகளில் கலந்து கொள்ளல் அதற்கான அமைச்சினால் வழங்கப்படும் சான்றிதழ்கள் பெறப்படும்.
- முக்கியமாக சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கான செயன்முறை மற்றும் அறிமுறை பரீட்சைக்கான பயிற்சிகளும் இங்கே இடம்பெறும்.
மேலதிக தொடர்புகளுக்கு:
- கலாச்சார மத்திய நிலைய பொறுப்பதிகாரி திருமதி.சர்மிலா சபேஷ் – 0768315928
- கலாச்சார மத்திய நிலைய அபிவிருத்தி சங்க செயலாளர் பரதகலாவித்தகர்.செல்வி.லோஜிகா கமலநாதன் – 0704903062



