‘டயலொக் மெகா வாசனா’ போலி லாட்டரி மோசடி: மட்டக்களப்பில் இருவர் கைது!

சமூக வலைதளங்கள் ஊடாக ‘டயலொக் மெகா வாசனா’ (Dialog Mega Wasana) எனும் பெயரில் போலி லாட்டரி சீழுப்புச் சீட்டு மோசடியில் ஈடுபட்டு, பொதுமக்களிடமிருந்து சுமார் 10 மில்லியன் ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) வடக்குப்பிரிவு அதிகாரிகளினால் நேற்று திங்கட்கிழமை (05) இந்தச் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டவர்கள் 29 வயதுடைய ஒரு ஆணும் பெண்ணும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு, மக்கள் வெற்றி பெற்றுள்ளதாகக் கூறி இந்தப் பண மோசடி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

நன்றி -ARV loshan news
.
.
.