கல்முனை ஆதார வைத்தியசாலையில் மருத்துவமனைப் பயணத்தில் ஒரு புதிய மைல்கல்லாக புதிய High Dependency Unit (HDU) உயர் கண்காணிப்பு சிகிச்சை பிரிவு மலர்ந்துள்ள இந்த புதிய ஆண்டில் இன்றைய தினம் திறக்கப்ட்டுள்ளது.
இந்த முக்கியமான முன்னேற்றம், நோயாளிகளுக்கு மேலும் மேம்பட்டதாகவும், காலத்துக்கேற்றதும், தீவிர சிகிச்சை சேவைகளை வழங்கும் திறனை மேலும் வலுப்படுத்தும்.
இந்நிகழ்வானது கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்றது.
வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசரசிகிச்சைப் பிரிவு கட்டிடத்தின் ஒரு பகுதியில் புதிய சிகிச்சை பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றது .
இந் நிகழ்வில் வைத்தியசாலை ஊழியர், வைத்தியசாலை நலன்விருப்பிகள் என பலர் கலந்து கொண்டனர்







