இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு!

என். செளவியதாசன்.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் எற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இந்து சமய அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களின் 2026 ஆம் ஆண்டுக்கான இவாக்குறுதி எடுக்கும் நிகழ்வு இன்று (6) நடைபெற்றது.

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ய. அநிருத்தனன் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களின் பங்குபற்றியிருந்தனர்.

இவ் வருடத்தின் இந்து கலாசார திணைக்களத்தின் முதல் நிகழ்வாக அமைந்த இன் நிகழ்வுக்கு எம். ஜிவராஜ் நிர்வாக உத்தியோகத்தர் (கல்முனை வடக்கு பிரதேசசெயலகம்) தலைமைதாங்கினார்.
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் சார்பில் செயத்திட்டத்தினை மாவட்ட இந்துகலாசார உத்தியோகத்தர் திரு கு. ஜெயராஜி நிகழ்தினார்.
வரவேற்புரை கல்முனை வடக்கு இந்துகலாசார உத்தியோகத்தர் திருமதி நா. சிறிப்பிரியா நிகழ்த்தினார். கல்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கலந்து சிறப்பித்தனர்.