அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கல்முனை வடக்கின் பல பிரதேசங்களுக்கும் விஜயம்!
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்கிரம வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கல்முனையின் பலபிரதேசங்களை இன்று (12) நேரில் சென்று பார்வையிட்டார்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு விஜயம் செய்த சிந்தக்க அபேவிக்கிரம வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல அபிவிருத்தித் திட்டங்களை நேரில் சென்று பார்வையிட்டார்.
அண்மையில் அம்பாறை மாவட்டத்திற்கு இந்திய அன்பளிப்பாக வழங்கப்பட்ட உலர் உணவுப் பொருட்களில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு வழங்கப்பட்ட பொருட்களை பொதியிடும் இடத்திற்கும் அவர் விஜயம் செய்திருந்தார்.
இன்றைய மாவட்ட செயலாளரின் விஜயத்தின் போது கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் T.J. அதிசயராஜ் மற்றும் மாவட்ட செயலகத்தின் உயர் அதிகாரிகள் குழுவினர் உடன் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.










