இரத்தப்போக்கு மட்டும் அல்ல, வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும் முக்கிய நோய் – மூலநோய்

World Piles Day – November 20
அரசவேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கத்தின் விழிப்புணர்வு செயல்திட்ட கருத்துரை

மூலநோய் நீண்டகாலமாக மக்களை வருத்தி வரும் பொதுவான நோய்களில் ஒன்றாகும். ஒழுங்கற்ற உணவு பழக்கங்கள், நீர்க்குறைவு, நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிதல், மலச்சிக்கல், கர்ப்ப கால மாற்றங்கள் போன்றவை இதன் முக்கிய காரணங்களாக காணப்படுகின்றன.

அறிகுறிகள் ஆரம்பத்தில் சிறிதாகத் தோன்றினாலும், சரியான சிகிச்சை இல்லையெனில் கடுமையான வலி, இரத்தப்போக்கு, infection, மற்றும் வாழ்வின் தரத்தையே பாதிக்கும் நிலைகளுக்கும் இந்நோய் வழிவகுக்கும்.

சித்த மருத்துவத்தில், மூலநோய் என்பது வாதம், பித்தம், கபம் ஆகிய தாதுக்களின் சமநிலையின்மை காரணமாக ஏற்படும் நோயாகக் கருதப்படுகிறது. எனவே சிகிச்சை வெறும் வலியைக் குறைப்பதற்காக மட்டுமில்லை; உடலின் உள் செயல்பாடுகளை சீரமைப்பதற்கும் நோக்கி செல்கிறது.

சித்தத்தில் மூலநோய் நிர்வகிப்பு மூன்று துறைகளில் நடக்கிறது:

1.உடல் சுத்திகரிப்பு மற்றும் உள்ளக சிகிச்சை இந்த மருந்துகள் குடலின் செயல்பாட்டைச் சீராக்கி, மலச்சிக்கலைக் குறைத்து, மூலநோய் வேரிலிருந்து சரியாகும் வழியை உருவாக்குகின்றன.

2.வெளி சிகிச்சைகள்
மூலநோய் எண்ணெய் தடவல்
Sitz bath
வெளிநீக்கம்

வலி, வீக்கம் மற்றும் இரத்தப்போக்கு குறைவதில் இச்சிகிச்சைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

3.வாழ்க்கைமுறை மாற்றம்
நார்ச்சத்து மிக்க உணவு (கீரை, காய்கறி, பழம்) ஆகியவற்றை உண்ணுதல், போதுமானளவு நீரருந்துதல், மலத்தை தடுத்துவைக்காமல் உடனேயே கழித்தல், நீண்ட நேரம் அமர்ந்திருப்பதைத் தவிர்த்தல், யோகாசனம் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்ளுதல்

சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காமற் போனால் கடுமையான பிரச்சினைகள் தோன்றலாம்.

பெரும்பாலான நோயாளிகள் வெட்கம் அல்லது விழிப்புணர்வு குறைவு காரணமாக ஆரம்ப நிலையில் சிகிச்சை பெறுவதில்லை

அறுவை மருத்துவப்பிரிவு,
அரசவேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கம்