சர்வதேச பார்வை தினத்தில் சுகாதார துறையினருக்கு கல்முனையில் கண் பரிசோதனை!
( வி.ரி. சகாதேவராஜா)
சர்வதேச பார்வை தினத்தை (17.10.2025) முன்னிட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் பணிப்பாளர் கலாநிதி டாக்டர் சுகுணன் குணசிங்கத்தின் ஆலோசனைக்கிணங்க வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் அனைவருக்குமான கண்பார்வை பரிசோதனை நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வைத்தியர்கள் தாதியர்கள் மருத்துவம் சாரா உத்யோகத்தர்கள் தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட சுமார் 50க்கும் மேற்பட்டோர் தமது கண் பரிசோதனை செய்து கொண்டனர்.
வைத்தியசாலையின் கண் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி மருத்துவர்.சிதேஸ் ஹெந்தவிதாரண தலைமையிலான வைத்தியர் ,தாதியர் , தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட குழுவினரால் இந்நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது.
நிகழ்வின் இறுதியில் வைத்தியசாலையில் பணிப்பாளரின் கருத்திற்கு இணங்க எதிர்வரும் காலங்களில் எமது அனைத்து பணியாளர்களும் இக்கண் பரிசோதனை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதுடன் அனைத்து பணியாளர்களின் ஆரோக்கியம் பேணப்பட வேண்டும் எனக் கூறப்பட்டது.








