கல்முனையில் பாடசாலை மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!


கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் மாணவன் ஒருவன் பாடசாலை அதிபரால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் ஏழாம் திகதி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுடன் ஆசிரியை ஒருவரிடம் ஆசி பெறச் சென்ற குறித்த மாணவன் அப்ப பாடசாலை அதிபரினால் தாக்கப்பட்டதாக கல்முனை வலையக் கல்வி பணிப்பாளருக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படு கிறது.

இரண்டு தினங்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் வீடு திரும்பியுள்ள போதும் குறித்த அதிபரின் செயற்பாடுகளின் பயம் காரணமாக பாடசாலை செல்ல  மறுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் சிறுவர் உரிமை மேம்பாட்டு பிரிவு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு கல்முனை அலுவலகம் ஆகியவற்றுக்கு முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளர்.

சம்பந்தப்பட்ட அதிபர் கல்முனை வலையக் கல்வி அலுவலகத்தக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் பணியாற்றி வந்த சமயம் பாடசாலையில் ஏற்படுத்தி வந்த தொடர்ச்சியான பிரச்சனைகள் காரணமாக அலுவலக மட்டத்திலான விசாரணை ஒன்றின் பின்னர் குறித்த பாடசாலையில் இணைக்கப்பட்டிருப்பதும் தெரிய வருகின்றது.