-சிறிவேல்ராஜ்-
கல்முனை நண்பர்கள் வட்டத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தராக பதவி உயர்வு பெற்று சென்ற பாலரெட்ணம் கோகுலராஜன் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கல்முனை நண்பர்கள் வட்டத்தின் தலைவர் எஸ். அரசரெட்டணம் தலைமையில் கல்முனை ‘டிலாணி ரெஸ்ட் இன்’ இல் நேற்று மாலை நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரீ. ஜே. அதிசயராஜ் கலந்து சிறப்பித்தத்துடன், கோகுலராஜன் அவர்களுக்கு பாராட்டு பத்திரம் வாசித்து வழங்கப்பட்டது .
இன் நிகழ்வுக்கு கல்முனை நண்பர்கள் வட்டத்தின் உறுப்பினர் களான பொன். செல்வநாயகம், வீ. அரசரெட்ணம், வீ. குலசேகரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




