151ஆவது உலக அஞ்சல் தினத்தையொட்டி இலங்கை அஞ்சல் திணைக்களம் நாடளாவிய ரீதியில் நடத்திய கட்டுரைப் போட்டியில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி மாணவி சி. பிராப்தி முதலாம் இடத்தினைப் பெற்றார் . உலக அஞ்சல் தினப் போட்டிகளுக்கான பரிசளிப்பு கடந்த ஒக்டொபர் 09ஆந் திகதி பதுளை அஞ்சல் வளாக கேட்போர் கூடத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்ற உலக அஞ்சல் தின வைபவத்தில் நடைபெற்றது.
. இந்த வைபவத்தில் ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில ஜயசேகர, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார, ஊவா மாகாண செயலாளர் அனுஷா கோகுல பெர்னாண்டோ, பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன, ஊவா மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனாரத்ன, மற்றும் தபால் திணைக்கள அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
தமிழ் மொழிப்பிரிவில் இரண்டாம் இடத்தை அட்டாளைச்சேனை மத்திய மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த மாத்திமா ரிப்ஹாவும் மூன்றாம் இடத்தை கண்டி மதீனா தேசிய பாடசாலையைச் சேர்ந்த I.M இன்பாஸ் அவர்களும் பெற்றுக் கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பணப்பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டதுடன் பதக்கமும் அணிவிக்கப்பட்டன