கல்முனை ஆதார வைத்தியசாலையின்மருத்துவ ஆய்வுகூடத்தை நவீன மயப்படுத்தும் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் வைத்தியசாலையில் நடைபெற்றது.

வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியலாநிதி குணசிங்கம் சுகுணன் அவர்களின் தலைமையில் புதிதாக நியமனம் பெற்று கடமையை பொறுப்பேற்று இருக்கும்
Chemical pathologists Dr T. இந்துஜா அவர்கள் ,பொறுப்பு ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் அகிலராஜ் உடனான ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்கள், பிரதிப் பணிப்பாளர், தாதிய பரிபாலகர், திட்டமிடல் பகுதி பிரிவினர் ஆகியோர் (9) கூடிய போது இதற்கான பல ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன. 


இது பற்றி பணிப்பாளர் வைத்தியலாநிதி குணசிங்கம் சுகுணன் அவர்கள் விபரிக்கையில்,
மருத்துவ ஆய்வுகூட பெறுபேறுகள் துல்லியமான கணிப்புக்களுடன், நோயாளர்களின் நலனை முதன்மையாக கொண்டு செயல்படுத்தபட வேண்டியவையாகும்.
“மருத்துவ ஆய்வுகூடம்” என்பது வைத்தியசாலையின் இதயம் போன்றது. இதன் திறன், துல்லியம், மற்றும் வேகம் உயர்ந்தால் நோயாளருக்கான சேவைகளின் தரமும் உயரும். எனவே நாம் அனைவரும் இணைந்து உயர்தரத்திலான ஆய்வுகூடத்தை உருவாக்க முனைவோம்.” என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இத்திட்டம் நிறைவு பெறும் வேளையில், ஆய்வு கூடத்தினால் தற்போது பெறும் சேவைகளுடன் இன்னும் பல சேவைகளை உயர் தரத்துடனும், துல்லிய கணிப்பீட்டுடனும் பெறலாம் என நம்பப்படுகின்றது.