பெரியநீலாவணையில் இடம் பெற்ற சர்வதேச முதியோர் தின நிகழ்வு!
சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு சமத்துவ மக்கள் நல ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பெரியநீலாவணை அன்னை சாரதா தேவி முதியோர் சங்கத்துடன் இணைந்து முதியோர் தின நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது முதியோர்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. இவற்றுக்கான நிதிப்பங்களிப்பை வழங்கிய சுவிஸ் நாட்டில் வசிக்கும்
யாழ்ப்பாணம் பலாலியைச் சேர்ந்த திரு.சந்திரசேகர் அவர்களுக்கும் ஏற்பாடு செய்த இரா.விஜயகுமாரன் அவர்களுக்கும் நன்றிகள் தெரிவித்தனர்.










