செல்லையா-பேரின்பராசா 

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் இந்து மாமன்றம் ஏற்பாடு செய்து நடாத்திய வாணிவிழா நிகழ்வு 30.09.2025 இப் பாடசாலை அதிபர் செல்லத்தம்பி-கலையரசன் தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

இவ் விழாவில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர்.கு.சுகுணன் பிரதம அதிதியாகவும், கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்  கல்முனை சரவணாஸ் நகைமாளிகை உரிமையாளர் க. பிரகலதன் சிறப்பு அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வில் இப் பாடசாலையின் முன்னாள் அதிபர் வ.பிரபாகரன் முன்னாள் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர். மாணவர்களின் பல்வேறுபட்ட கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டமை சிறப்பம்சமாகும்.