அருட்பிரகாச வள்ளலார் பூமிக்கு வருவிக்கப்பட்ட நாள். அக்டோபர் 05. பாண்டிருப்பு வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தில் விசேட ஆன்மீக நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.


05 – 10 – 2025. ஞாயிற்றுக்கிழமை காலை 09 மணி முதல் நெசவு நிலைய வீதி பாண்டிருப்பில் உள்ள வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தில் இடம் பெறும்.


நம்மிடையே வாழ்ந்த மனிதனும் தெய்வமாகலாம். என்ற கோட்பாட்டுக்கு அமைவாக சாதி, சமய, சடங்குகள், மூடநம்பிக்கைகளுக்கு எதிராக சமூக சீர்திருத்த கோட்பாடுகளை மக்கள் மத்தியிலே முன்வைத்து, தனக்கென சங்கம் அமைத்து தனிக்கொடி கண்ட சன்மார்க்கி, அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ ஜீவகாருண்யம் போதித்த வள்ளலார் என்று அழைக்கப்பட்ட திரு அருட்பிரகாச வள்ளலார். ராமலிங்கம் அடிகளாரின் பிறந்த தின நிகழ்வுகள்.

சன்மார்க்க கோட்பாடுகளை ஏற்ற உலகெலாம் வாழும் மக்களால் மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடபட உள்ளது. பாண்டிருப்பில் அமையப்பெற்றுள்ள. வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்ப மையத்திலும் விசேட ஆன்மீக நிகழ்வுகள் நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து அருட்பெரும்ஜோதி ஆண்டவரின் அடியார்கள். இன்நிகழ்வில் பங்கேற்க உள்ளனர். வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு நிலையத்தின் ஸ்தாபகர் வல்லவர் தவத்திரு புண்ணிய மலர் அம்மா தலைமையில் நடைபெற உள்ள இந்நிகழ்வுகளில். அருட்பெருஞ்ஜோதி கீதம், இசைத்தல். ஜோதிசுடர் எற்றுதல்,தியானம், யோகாசனம், வள்ளலாரின் போதனைகள், என்ன பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக. வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு நிலையத்தின் ஆன்மீக இணைப்பாளர் கல்முனை நேற்றுக்கு தெரிவித்தார்.

இந்தியாவின் கடலூர் மாடட்டம் மருதூரில் 1823 அக்டோபர் 05 ஞாயிற்றுக்கிழமை நாள் அன்று இராமையா சின்னம்மை ஆகியோருக்கு இறைவனால் பூவுலகிற்கு வருவிக்கப்பட்டவரே அருட்பிரகாச வள்ளலார் என போற்றப்படும் இராமலிங்க அடிகளார்.