( வி.ரி.சகாதேவராஜா)
விவசாயத்தில் புதிய தொழில்நுட்பம் புகுத்தினால் மாத்திரமே உயர் விளைச்சலை பெறமுடியும்.எனவேதான் பரீட்சார்த்தமாக அம்பாறை மாவட்டத்தில் புதிய இலகுவாக உறிஞ்சும் திரவ உரவகை அறிமுகம் செய்திருக்கிறோம்.
இவ்வாறு பார்க் (Barck International (Pvt) Ltd) நிறுவன பணிப்பாளர் ரத்னசபாபதி பாஸ்கரன் சம்மாந்துறை விவசாயிகள் மத்தியிலே பேசும் போது தெரிவித்தார் .
சம்மாந்துறை நீர்ப்பாசன திணைக்கள மண்டபத்தில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு செயலமர்வு நேற்று (29) திங்கட்கிழமை நடைபெற்றபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஓய்வு நிலை கமநல உத்தியோகத்தர் மா.சிதம்பரநாதன் ஒருங்கிணைப்பில் சந்தைப்படுத்தல் முகாமையாளர் சம்பத் வித்யாரத்னபுதிய உரவகை தொடர்பாக விளக்கமளித்தார்.
அங்கு பணிப்பாளர் பாஸ்கரன் கூறுகையில்..
Barck International (Pvt) Ltd என்பது இலங்கையின் விவசாயத் துறையில் ஒரு குறுகிய காலத்தில் சிறந்து விளங்கும் ஒரு வணிக குழுமமாகும். விவசாயத்துறையில் நம்பிக்கைக்குரிய மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட வணிக நிறுவனம் ஆகும். BARCK உரம், அனைத்து பயிர்களிலும் சிறந்த விளைச்சலை வழங்கி, விவசாயிகளிடையே நம்பிக்கையையும் அரச அதிகாரிளுடன் வலுவான கூட்டுறவையும் வளர்த்துள்ளோம்.
ஊட்டச்சத்துள்ள தாவரங்களுக்கு எளிதில் உறிஞ்சக்கூடிய வடிவங்களில் மாறும். இரசாயன உரங்கள், பயிர் விளைச்சலும் தாவர ஆரோக்கியமும் அதிகரிக்கின்றன.என்றார்.







