கிழக்கிலங்கையில் புகழ் பெற்ற பாடசாலையான கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவினை சிறப்பிக்கும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றான மாபெரும் ஆசிரியர் தின விழாவானது கல்லூரியின் அதிபர் அருட் சகோதரர் ச. இ. றெஜினோல்ட் FSC அவர்களின் தலைமையிலும் 125 ஆவது ஆண்டு நிறைவுக் குழுவின் செயலாளர் மற்றும் நிறைவேற்று உறுப்பினர்களின் சிறப்பான ஒழுங்கு படுத்தலின் கீழும் 20/09/ 2025 அன்று பிரமாண்டமாக நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக பாடசாலை முன்னால் அதிபர் அருட் சகோதரர் S. சந்தியாகு FSC அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், சிறப்பு அதிதிகளாக அருட் சகோதரர் M. ஸ்ரிபன் மத்தியு FC அவர்களும், அருட் சகோதரர் FR.விரைனர் செலர் அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன், 750 க்கு மேற்பட்ட ஓய்வு பெற்ற அதிபர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற கல்வி சாரா ஊழியர்கள், இடமாற்றம் எடுத்து சென்ற ஆசிரியர்கள், இடமாற்றம் எடுத்து சென்ற கல்வி சாரா ஊழியர்கள், தற்போது பாடசாலையில் கடமையாற்றுகின்ற அதிபர்கள், ஆசிரியர்கள், மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்ததுடன், அவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

குறித்த நிகழ்வினை சிறப்பாக நடாத்துவற்கு உதவிகளையும், ஒத்துழைப்புக்களையும் வழங்கிய பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், 125ஆவது ஆண்டு நிறைவுக் குழுவின் உறுப்பினர்கள், குறித்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் பாடசாலைச் சமூகம் சார்பாக பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்தனர்,

இந் நிகழ்வில் ஆசிரியர்களின் கலை நிகழ்ச்சிகளும் சிறப்பாக இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.