பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலய மாணவிகளுக்கு விளையாட்டு சீருடை வழங்கிவைப்பு!

பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் உதவும் பொற்கரங்களின் ஸ்தாபகர் விசு கணபதிப்பிள்ளையின் பூரண நிதிபங்களிப்பில் பெரிய நீலாவணை கல்வி அபிவிருத்தி ஓன்றியத்தின் ஏற்பாட்டில்(பெடோ அமைப்பு) பெண் மாணவர்களுக்கான விளையாட்டு சீருடை வழங்கப்பட்டன.

இந் நிகழ்வு அதிபர் அந்தோனிசாமி அகினோ லோரன்ஸ் தலமையில் நடைபெற்றது. பிரதி அதிபர் பற்குணராஜா இஆசிரியர் கலாவதனிஇ திருமதி இதயநாயகம் ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகஷ்தர்கள்இகல்விசாரா ஊழியர்கள் பெடோ அமைப்பு ஷ்தாபகர் ஆசிரியர் சுபராஜன்இ பெடோ அமைப்பு தலைவர் ஆசிரியர் கமலதாசன் கலந்து சிறப்பித்தனர்.