பெரிய நீலாவனண விஷ்ணு மகா வித்தியாலயத்திற்கு போட்டோ பிரதி இயந்திரம் அன்பளிப்பு
பெரிய நீலாவனண விஷ்ணு மகா வித்தியாலயத்திற்கு போட்டோ பிரதி இயந்திரம் வழங்கி அன்பளிப்பு செய்யப்பட்டது. இதற்கான நிதிப்பங்களிப்பை உதவும் பொற்கரங்கள் அமைப்பின் ஸ்தாபகர் விசு கணபதிப்பிள்ளை, கல்முனை சரவணாஷ் ஜூவலரி உரிமையாளர் பிரகலதன், சமூகசேவகர் திருமதி குகன் மைத்திரேயி ஆகியோர் வழங்கி இருந்தனர்.
பெரிய நீலாவணை கல்வி அபிவிருத்தி ஓன்றியத்தின் ஏற்பாட்டில்(பெடோ அமைப்பு) மாணவர்களின் கற்றல் நடலடிக்கைக்காவும் அலுவலக செயற்பாட்டிற்காவும் போட்டோ பிரதி இயந்திரம் வழங்கும் நிகழ்வு அதிபர் அந்தோனிசாமி அகினோ லோரன்ஸ் தலமையில் நடைபெற்றது.
இதற்கு பிரதி அதிபர் பற்குணராஜா ,ஆசிரியர், சிறிகரன் கலாவதனி, திருமதி இதயநாயகம் ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,கல்விசாரா ஊழியர்கள் பெடோ அமைப்பு ஷ்தாபகர் ஆசிரியர் சுபராஜன், பெடோ அமைப்பு தலைவர் ஆசிரியர் கமலதாசன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்