அம்பாரை மாவட்ட கரையோரப் பிரதேச செயலகங்களின் மகளிர் செயற்பாட்டு உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல் – மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் கலந்து சிறப்பித்தார்.


அம்பாரை மாவட்ட கரையோரப் பிரதேச செயலகங்களின் மகளிர் செயற்பாட்டு உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று (17) அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சிறப்பாக இடம்பெற்றது.


அம்பாரை மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இணைப்பாளர் எம்.ரி.வாசனா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.


கௌரவ அதிதிகளாக, பிரதியமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான வசந்த பியதிஸ்ஸ, பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.ஆதம்பாவா, முத்து ரத்வத்த, அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜெகராஜன், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.அன்சார்,தேசிய மக்கள் சக்தியின் அக்கரைப்பற்று மாநகர சபையின் உறுப்பினர்கள் றமீஸ் மொகிதீன், எம்.ஐ.ஆயிசா, ஏ.எல்.றிஸ்லி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர் அபு சஹித் மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர்கள், பிரதியமைச்சர் வசந்த பிஸதிஸ்ஸவின் இணைப்பாளர் சுல்தான் சத்தார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


இந் நிகழ்வில் மூவினங்களின் கலை,கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றன.
கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவு மாணவர்களின் வரவேற்பு நடனமும், அக்கரைப்பற்று கலாசார மத்திய நிலையம் மற்றும் அக்கரைப்பற்று அஸ் -ஸிராஜ் மகாவித்தியாலய மாணவர்களின் கஸிதாவும், அம்பாரை பிரதேச சிங்கள நடனமும் சிறப்பாக இடம் பெற்றன. அமைச்சர் அவர்களின் காத்திரமான சிறப்புரையும் இடம் பெற்றிருந்தது.

அம்பாறை மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபயவிக்ரம தலைமையில் ஒரு நிகழ்வு இடம் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.