புரட்டாதி மாத பௌர்ணமி கலை விழா நாளை (07) சேனைக்குடியிருப்பில் நடைபெறவுள்ளது!
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் ,கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து மாதாந்தம் நடாத்திவரும் பௌர்ணமி கலை விழாவின் வரிசையில் புரட்டாதி மாத பௌர்ணமி கலை விழா நாளை 07.09.2025 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெறவுள்ளது.
கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் சேனைக்குடியிருப்பு கணேஷா மகா வித்தியாலயத்தில் மாலை 5.30 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகும்.
இந் நிகழ்வுக்கு கலாநிதி கி.புண்ணியமூர்த்தி ( சட்டத்தரணி , முன்னாள் பீடாதிபதி அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரி) அவர்கள் பிரதம அதிதியாகவும், கௌரவ அதிதிகளாக வைத்தியர் எம்.பி.சில்மி ( வைத்திய அதிகாரி ஆரம்ப சுகாதார வைத்தியசாலை சேனைக்குடியிருப்பு), ஏ.எல்.தௌபீக் மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ,திருமதி வாசுகி ஜங்கரன் ( அதிபர் கணேஷா மகா வித்தியாலயம்) ,கா.சந்திரலிங்கம் ( ஓய்வு நிலை அதிபர்) ,கதிரமலை செல்வராசா முன்னாள் மாநகரசபை உறுப்பினா) ,கோவிந்தபிள்ளை அன்னம்மா ( முன்னாள் மாநகர சபை உறுப்பினர்) ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இந் நிகழ்வில் உள்ளுர் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் பல இடம் பெறவுள்ளன அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அழைக்கப்படுகின்றனர்.

