இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்  நேற்று(21)  நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொண்டதை அடுத்து,   தற்போது சினோபெக் நிறுவனமும் தங்களுடைய எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது. 

இதன்படி, ஒரு லீட்டர் ஒக்டேன் 95 பெட்ரோலின் விலை 122 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 487 ரூபாவாகும்.

ஒக்டேன் 92 பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 81 ரூபாவால் உயர்த்தப்பட்டு, அதன் புதிய விலை 398 ரூபாவாக  அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஒரு லீட்டர் சுப்பர் டீசலின் விலையை  219 ரூபாவால்  உயர்த்தியுள்ளதுடன், அதன் புதிய விலை  572 ரூபாவாகும்.

அதேபோல், ஒரு லீட்டர் ஒட்டோ டீசலின் விலை 79 ரூபாவால்  உயர்த்தப்பட்டு, அதன் புதிய விலை  382ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில்,  பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைகளுக்கு இணையாக லங்கா ஐஓசி நிறுவனமும் தனது எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது. 

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் விலைத் திருத்தத்திற்கு அமைய,  92 ஒக்டேன் பெட்ரோலின் விலை லீட்டருக்கு   81 ரூபா அதிகரித்து   398 ரூபாவாகும், மண்ணெண்ணெயின் விலை லீட்டருக்கு 60 ரூபா அதிகரித்து   255 ரூபாவாகவும்,  95 ஒக்டேன் பெட்ரோலின் விலை லீட்டருக்கு  90 ரூபா அதிகரித்து  455 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டது. 

 அத்துடன், ஒட்டோ டீசலின் விலை லீட்டருக்கு  79 ரூபாவால் அதிகரித்து   382 ஆகவும், சுப்பர் டீசலின் விலை லீட்டருக்கு   90 ரூபா அதிகரித்து  443 ரூபாவாகவும் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.