ஈழநாடு பத்திரிகை சமூக சேவைக்கான விருது 2026 வழங்கும் நிகழ்வை கனடாவில் நடத்தியது. இதில் சமூக சேவையாளர் விசு கணபதிப்பிள்ளை அவர்களுக்கு சிறந்த சமூக சேவைக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.


கனடாவிலும் தாயகத்திலும் நன்கு அறிமுகமான விசு கணபதிப்பிள்ளை
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தின் கல்முனையில் 03.03.1960ல் பிறந்து தனது ஆரம்பக்கல்வியை பெரிய கல்லாறு கல்லூரியிலும் பின்னர் சம்மாந்துறை தொழில் நுட்பக் கல்லூரியில் கட்டிடம்சம்மந்தமான கற்கை நெறியினை கற்றுத்தேர்ந்தார்.

கடந்த முப்பது வருடமாக கனடாவில் வசித்து வருகிறார். இலங்கையில் கட்டிட நிர்மாணிப்பு அரச ஒப்பந்தக்காரராக வடக்கு கிழக்கு மாவட்டங்களில் பணியாற்றியுள்ளார் அத்துடன் பல அரச சார்பற்ற நிறுவனங்களினால் செயல்படுத்தப்பட்ட திட்டங்களிலும் ஈடுபட்டவர் கல்முனை வின்சன் டிபோல் கந்தோலிக்க சபை ‘வை. எம். சி. ஏ” போன்றவற்றினால் செயல்படுத்தப்பட்ட புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீட்டுத்திட்ட நிர்மாணிப்பு பணிகளில் ஆர்வமாக ஈடுபட்டவர். சர்வோதயம், கிராமோதய சபை போன்றவற்றிறும் முக்கிய பதவிகளை வகித்தவர்.


கனடா நாட்டிலும் பல சமூக சேவைகளிலும் ஆர்வமாக ஈடுபட்டு வருவதோடு உதவும் பொற்கரங்கள் என்ற தொண்டர் நிறுவனத்தை கனடாவில் நிறுவி அதன்தலைவராக இருந்து இலங்கையின் வடக்கு கு கிழக்கு மாகாணத்திலுள்ள பல பாடசாலைகளின் மாணவர்களுக்கான கல்வி மேம்பாட்டு உதவிகளை தொடர்ந்தும் செய்து கொண்டுவருகிறார். இவரின் சேவையை பாராட்டி இலங்கையிலும் கனடாவிலும் பல விருதுகளை குறிப்பாக கனடாவின் பிரம்டன் மேயரிடமிருந்தும் ஒன்றாரியோ மாகாண அரசினாலும் உதயன் பத்திரிகை நிறுவனத்தினதும் கனடா இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கத்தின் சிறப்பு விருதுகள் திரு.விசு கணபதிப்பிள்ளை அவர்கள் பெற்றது சமூகத்திற்கு ஆற்றிவரும் பணிகளுக்கு கிடைத்த சான்று விஷேடமாக எலிசபெத் மாகாராணியாரின் விருதும் இவருக்கு கிடைத்தமை பெருமைப்படத்தக்கது.
சமுக சேவைக்கான விருது.


விசு கணபதிப்பிள்ளை அவர்கள் மட்டுநகரில் பிறந்து அங்கு உயர்கல்விவரை சிறப்பாக தங்களது கல்வித் தகைமைகளை பெற்று தொடர்சியாக இலங்கை அரசாங்கத்தின் கட்டிட நிர்மானத்துறை ஒப்பந்தக்காரராக பல ஆண்டுகள் சேவை புரிந்து, தொழில் துறையில் அவர்களின் தேர்ச்சியை பாராட்டி இலங்கை அரசாங்கத்தின் சிறப்பான, பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்றுக் கொன்டவர் இலங்கையில் வாழ்ந்த காலத்தில் தன்னை முழுமையாக ஒர் சமுக சேவைப்பணிகளுக்கே அர்பணிப்பு செய்தார்.

குறிப்பாக யுத்த காலத்தில் கிழக்கு மாகாணத்தில் மக்கள் பல இடர்கள் துயரத்தில் அல்லல்பட்ட நேரத்தில் பல தன்னார்வ தொண்டர் அமைப்புக்களுடன் இணைந்து பல சமூக நலன் சார்ந்த திட்டங்களில் பெரும் பங்காற்றினார். பின்னர் தாயகத்தின் ஏற்பட்ட போர் சூழல் காரணமாக 1995ஆம் ஆண்டு கனடா மண்ணில் கால்பதித்தார். வியாபாரத் துறையிலும் மற்றும் கட்டிட பராமரிப்புத் துறையிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டதுடன், தாயகத்து மக்களின் துயர்துடைப்பிற்காக கனடாவில் உதவும் பொற்;கரங்கள்” என்ற சமுக சேவை நிறுவனத்தினை ஆரம்பித்து பல வருடங்களாக கனடா மண்ணிலும், தாயக உறவுகளுக்காக பல சமுகம் சார்ந்த நலன்புரித்திட்டங்களை மிகவும் நேர்த்தியுடனும், விசுவாசமாகவும் நடாத்தி வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும். கனடா மண்ணில் குறிப்பாக பல அகதிகள் கோரிக்கையளர்களை பொறுப்பெடுத்து அவர்களுக்கு தேவையான சகல உதவிகள் சட்ட அனுசரனைகளைவழங்கிவருவதுடன் அவர்கள் நிரந்தரமாக கனடாவில் வாழ வழி சமைத்து கொடுத்துள்ளார்.

சமய மத வேறுபாடு கடந்து சகல ஆலயங்களிலும் ஓர் தொண்டராக விசு அவர்களின் நீண்ட கால தொண்டர் சேவையினை பாராட்டி ஒன்ராறியோ அரசாங்கம் “ 35 வருடகால சமூக சேவைக்கான விருதினையும்” பிரம்ரன் மாநகரம் விசு கணபதிப்பிள்ளை அவர்களின் சமூக சேவையை பாராட்டி “ வாழ் நாள் சாதனையாளர் விருது” “நீண்ட கால சேவைக்கான விருது” சிறந்த கனடா பிரஜா என்ற உயரிய விருதுகளையும் வழங்கி கௌரவித்து சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.இங்கு நடைபெறும் எல்லா பொது நிகழ்வுகளிலும் பங்குபற்றி் தம்மாலான அளவில் சமூகத்தின் தேவைகளை நிறைவு செய்து வரும் விசு கணபதிப்பிள்ளை அவர்களுக்கு 2026 ஆண்டு ஈழநாடு பத்திரிகை சமூக சேவைக்கான விருதினை வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது.