நாவிதன்வெளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

 பாறுக் ஷிஹான்


நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திருமதி ஆர்.ராகுலநாயகி சஜிந்ரன்   ஏற்பாட்டில் அபிவிருத்திக் குழுத் தலைவர்இ பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா தலைமையில் திங்கட்கிழமை (25 ) நாவிதன்வெளி பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.அப்துல் வாசித், நாவிதன்வெளி பிரதேச சபை கௌரவ தவிசாளர் இ.ரூபசாந்தன், நாவிதன்வெளி பிரதேச சபை கௌரவ உறுப்பினர்கள், நாவிதன்வெளி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி திலகராணி கிருபைராஜா   நிருவாக கிராம உத்தியோகத்தர் திரு. மனோஜ் இந்ரஜித், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திரு. செ. சிவம் ஆகியோரும் நாவிதன்வௌி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பல்வேறு துறைசார் நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள், அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் நாவிதன்வௌி பிரதேச செயலக வௌிக்கள உத்தியோத்தர்களும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நாவிதன்வெளி பிரதேச அபிவிருத்திக்கான விடயங்கள் மற்றும் பிரதேசத்தில் காணப்படும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் என்பன கலந்துரையாடப்பட்டன.