( வி.ரி. சகாதேவராஜா) 

 கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் இயங்கி வரும், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக களுவாஞ்சிகுடி மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தின் கண்காட்சியும் விற்பனை கூடமும் (21.08.2025)  பிரதேச செயலாளர்  உருத்திரன் உதயஶ்ரீதர் தலைமையில் களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் ஞாபகார்த்த மண்டபத்தில் மிகவும் விமர்சையாக இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பிராந்திய நிர்வாகம், கிராம அபிவிருத்தி, கிராமிய தொழிற்துறை, சுற்றுலா மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சின் செயலாளர் இசட். ஏம் .பைசலும் விசேட  அதிதியாக கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின்  பணிப்பாளர்  கே.இளங்குமுதனும் கலந்து கொண்டதுடன், மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் பா. கோகுலராஜன், மாவட்ட கிராம அபிவிருத்தி அலுவலக சிரேஷ்ட தையல் போதனாசிரியை நி. ரவிச்சந்திரன் மற்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் தெ . நவநாயகம் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 இந் நிகழ்வில் பயிற்சி நிலைய மாணவிகளால் வடிவமைக்கப்பட்ட கைவினை பொருட்களின் கண்காட்சியும், விற்பனையும்  இடம்பெற்றதுடன், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வினை மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக கிராம அபிவிருத்தி பிரிவானது தையல் போதனாசிரியர் மற்றும் பயிற்சி நிலைய மாணவிகள் இணைந்து ஒழுங்கமைப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.