காரைதீவில் களைகட்டிய கல்முனை முத்தமிழ் கலைக்கூடத்தின் “நிருத்தியார்ப்பணம்”  பரதநாட்டிய நிகழ்ச்சி

( வி.ரி.சகாதேவராஜா)

கல்முனை முத்தமிழ் கலைக்கூடத்தின் “நிருத்தியார்ப்பணம்”  பரதநாட்டிய நிகழ்ச்சி காரைதீவு விபுலானந்தா கலாசார  மண்டபத்தில்,  கலைக் கூடத்தின் தலைவர் சிவசிறி அடியவன்  பிரமின் தலைமையில் சனிக்கிழமை(16) நடைபெற்றது .

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவன  பணிப்பாளர்  பேராசிரியர்  கலாநிதி பாரதி கென்னடி கலந்து சிறப்பித்தார் .

கௌரவ அதிதிகளாக  நிறுவனத்தின்  நடனம் அரங்காற்றுகை திணைக்கள சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி துரைசிங்கம் உஷாந்தி , மட்டக்களப்பு வலயக் கல்வி பணிமனையின் அழகியகல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர்  கலாநிதி மலர்விழி சிவஞானசோதிகுரு,  ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள் .

அழைப்பு அதிதிகளாக கல்முனை வலய நடன ஆசிரிய ஆலோசகர் ரிகே.றீசா பத்திரண மற்றும் திருக்கோவில் ஆசிரிய ஆலோசகர் திருமதி.தங்கமாணிக்கம் சிறப்பித்தார்கள் .

நடனத் துறையில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த ஐந்து மாணவிகளின் நடன ஆற்று கைகள் சிறப்பாக நடைபெற்றன.