வி.சுகிர்தகுமார் 49 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் அக்கரைப்பற்று மண்ணைச்சேர்ந்த ராம்கராத்தே சங்க மாணவன் எஸ்.நவக்சன் குமிற்றி போட்டியில் தங்கம் பதக்கத்தினை சுவீகரித்து கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்தார்.
தேசிய விளையாட்டு விழாவானது காலியில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்தில் 18 19 20ஆம் திகதிகளில் நடைபெற்றது.
நடைபெற்ற போட்டிகளில் கிழக்கு மாகாணத்திற்கு 02 தங்கம் 02 பித்தளை பதக்கங்கள் கிடைக்கப்பெற்றன.
இதில் 19 வயதுடைய ராம்கராத்தே மாணவன் எஸ்.நவக்சன் குமிற்றி போட்டியில் தங்கம் வென்றதுடன் 49 வருடங்களின் பின்னர் அம்பாரை மாவட்டத்தில் குமிற்றி போட்டியில் தங்கம் வென்றவர் எனும் சாதனை படைத்தார்.
சிரேஸ்ட வீரர்கள் பங்குபற்றும் போட்டியில் இளவயது வீரராக கலந்து கொண்டு தங்கம் வென்றவர் எனும் பெருமையினையும் தனதாக்கிக் கொண்டார்.
இவருக்கான பயிற்சிகளை ராம் கராத்தே சங்கத்தின் பிரதம போதனாசிரியர் சிகான் க.கேந்திரமூர்த்தி மற்றும் சங்கத்தின் பயிற்றுவிப்பாளர்களான சென்சி கே.இராஜேந்திரபிரசாத், சென்சி கே.சாரங்கன் ஆகியோர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

