கல்முனைத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று சிறப்பாக நிகழ்ந்த ”கவிதை கேளுங்கள்” நிகழ்வு!

கல்முனைத் தமிழ்ச் சங்கத்தின் முதல் நிகழ்வான கவிதை கேளுங்கள் நேற்று 11.05. 2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:30 மணிக்கு கல்முனை வடக்குப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நிகழ்ந்தது.

நிகழ்வுகளுக்கு கல்முனைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சஞ்சீவி சிவகுமார் தலைமை தாங்கினார். இவ்விழாவில் கல்முனை வடக்குப் பிரதேச செயலாளர் ரி.ஜே அதிசயராஜ் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. ய. அனுருத்தனன் மற்றும் கிழக்கு மாகாண பண்பாட்டாலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் காலம் சென்ற மூத்த கவிஞர்கள் மற்றும் வாழும் கவிஞர்களின் கவிதைகள் வாசிக்கப்பட்டன.

சண்முகம் சிவலிங்கம் அவர்களின் கவிதை உமா வரதராஜன் அவர்களாலும்,
நீலாவணனின் கவிதை சஞ்சீவி சிவகுமாரினாலும் ,மு.சடாட்சரம் அவர்களின் கவிதை பூவை சரவணபவானினாலும் வாசிக்கப்பட்டன. பாண்டியூரனின் கவிதையை ச.ரகுவரன் அவர்களும், கல்லூரனின் கவிதையை பிரதீபா சுந்தர்ராஜன் அவர்களும் வாசித்தனர்.

அதனைத் தொடர்ந்து வாழும் கவிஞர்களின் கவிதைகள் கவிஞர்களால் வாசிக்கப்பட்டன.

பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன், வைத்தியர் புஸ்பலதா (மலரா),சிவ வரதராஜன், இந்திரகுமாரர், டனீஸ்கரன், சுந்தர் நிதர்சன், மற்றும் க. ருத்திரம்பாள் ஆகியோர் தம் கவிதைகளை முன்வைத்தனர்.

வாசிக்கப்பட்ட கவிதைகள் குறித்த தொகுப்புரையாக தமிழ் சங்கத்தின் உப தலைவர் திரு வி.பிரபாகரன் அவர்களினால் அவதானிப்புரை நிகழ்த்தப்பட்டது.

நிகழ்வில் கல்முனை வடக்குப் பிரதேச செயலாளர் திரு ரி. ஜே அதிசயராஜ் மற்றும் இந்து கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் திரு.ய அனுருத்தனன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.


நிறைவாக சங்கத்தின் செயலாளர் ச. ரகுவரன் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வுகள்நிறைவடைந்தன. நிகழ்வுகளை திரு.வே அரவிந்தன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.