கல்முனை ஆதார வைத்தியசாலையில் விசேட செயலமர்வும் பரிசளிப்பு நிகழ்வும்

உலக கை சுகாதார தினத்தினை (05.05.2025) முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் விசேட நிகழ்வுகள் இடம் பெற்றன. இந்நிகழ்வில் வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர். சுகுணண் குணசிங்கம் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக வைத்தியசாலையின் பிரிவுகளுக்கு இடையே கை கழுவும் தொழில்சார் நுட்ப முறைக்கான போட்டி ஒன்று வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஊழியர்களுக்கு இடையில் இடம்பெற்றது.


மேலும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஊழியர்களுக்கு இடையேயான கை கழுவும் விழிப்புணர்வு பற்றிய சித்திர போட்டியும் கண்காட்சியும் இடம் பெற்றது.  இடம்பெற்ற போட்டிகளின் தெரிவு செய்யப்பட்ட வெற்றியாளர்களுக்கு பரிசீல்களும், கௌரவிப்பு சான்றிதழ்களும் வழங்கி இன்று (09.05.2025) பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.


இன்றைய நிகழ்வானது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வின் போது மட்டக்களப்பில் இருந்து வருகை தந்த கிழக்கு பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளரும்  விசேட அதிதியாக கலந்து கொண்டவருமான  நுண்ணுயிரியல் வைத்திய நிபுணர் Dr.வைதேகி பிரான்சிஸ் அவர்கள் சுகாதார பராமரிப்பு தொற்றுக்கள் சம்பந்தமான விசேட செயல் அமர்வு ஒன்றினையும் நிகழ்த்தினார். 


இந்நிகழ்வின் போது வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் Dr. தாஹிரா சபியுதீன், சிறுபிள்ளை வைத்திய நிபுணர் Dr. ரொஷாந்த், சத்திர சிகிச்சை நிபுணர் Dr. அன்ரன் சுவர்ணன், வைத்தியர்கள், தாதிய பரிபாலகர், தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் அனைத்து உத்தியோகத்தர்கள் ஊழியர்களும் கலந்து சிறப்பித்தனர்.