கல்முனையில் 03 நாட்கள் இறைச்சிக் கடைகளுக்கு பூட்டு.!
(அஸ்லம் எஸ்.மெளலானா)
தேசிய வெசாக் பண்டிகையை முன்னிட்டு பொது நிர்வாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக எதிர்வரும் 2025.05.12 முதல் 2025.05.14 வரையான மூன்று நாட்களும் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சிக் கடைகள் யாவும் மூடப்படும் என மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அறிவித்துள்ளார்.
இம்மூன்று நாட்களும் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட விலங்கறுமனையும் மூடப்பட்டிருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கான பணிப்புரைகளை சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு ஆணையாளர் விடுத்துள்ளார்.
மேலும், தனிப்பட்ட இடங்களில் மாடு, ஆடு மற்றும் கோழி உள்ளிட்ட விலங்குகளை அறுக்க வேண்டாம் எனவும் அனைத்து இறைச்சிக் கடைகளின் உரிமையாளர்களும் பொது மக்களும் இவ்வறிவுறுத்தலுக்கு அமைவாக செயற்படுமாறும் ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி கேட்டுக் கொண்டுள்ளார்.