உலக தாதியர் தினத்தை முன்னிட்டு வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் அவர்களின் தலைமையில் இன்று (08.05.2025)
தாதிய உத்தியோகஸ்தர்களினால் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதிப் பணிப்பாளர், தாதிய பரிபாலகர், மற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வானது புனித தாதியத்தின் விளக்கேந்திய சீமாட்டி புளோரன்ஸ் நைட்டீன்கேல் அம்மையார் அவர்களின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்த கௌரவ நிகழ்வுடன் ஆரம்பமானது. பணிப்பாளர் அவர்களின் சிறப்புரையினை தொடர்ந்து தாதியர்களினால் இரத்ததானம் வழங்கப்பட்ட நிகழ்வானது புத்துணர்வுடன் நிறைவு பெற்றது.



