வெள்ளிப் பதக்கம் வென்றார் கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு படை உத்தியோகத்தர் ஆஷாத்

(அஸ்லம் எஸ்.மெளலானா)

Srilanka Masters Athletics நடாத்தும்

37 ஆவது வருடாந்த தேசிய மெய்வல்லுனர் போட்டியில் கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு படை உத்தியோகத்தரும் சனிமெளன்ட் விளையாட்டு கழகத்தின் சிரேஷ்ட வீரருமான ஏ.எல்.எம் ஆஷாத் பங்குபற்றி, ஈட்டி எறிதல் போட்டியில் 2ஆம் இடத்தினை பெற்று – வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டார்.

இப்போட்டி சனிக்கிழமை (15) தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

இச்சாதனையை படைத்து அம்பாறை மாவட்டத்திற்கும் கல்முனை மாநகரத்திற்கும் பெருமையைத் தேடித்தந்துள்ள மாநகர சபை உத்தியோகத்தர் ஏ.எல்.எம். ஆஷாத்திற்கு  கல்முனை மாநகர சபை சமூகம் வாழ்த்துத் தெரிவித்துள்ளது.