(கல்முனை ஸ்ரீ)
கல்முனைப் பிரதேசத்தில்கடந்த சில தினங்களாக எவ்வித முன்னறிவித்தலுமின்றி
மின்சாரம் துண்டிக்கப்படுவதால் மின் பாவனையாளர்கள் பெரும் சிரமத்தை
எதிர்நோக்கி வருகின்றனர்.
குறிப்பாக மின் கருவிகளைப் பயன்படுத்தி தொழில் புரிவோர் பொதுவாக ஒட்டுனர்கள்
அச்சு இயந்திரங்கள் மர வேலை செய்பவர்கள் என மின் உபகரணங்களைப் பயன்
படுத்தி தொழில் புரிவோர் தமது தொழிலை இழந்து வருமானத்திலும் பாதிப்பு
ஏற்படுவதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
காலை வேளையில் மின் துண்டிக்கப்படும்போது அன்றைய முழு தினமுமே தொழில் புரிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தமது நிறுவனங்கள் மற்றும் தமது உதவியாளர்கள் மின் துண்டிக்கப்பட்டவுடன் வீடுகளுக்குச் செல்வதாகவும் பின்னர் மின்சாரம் வழைமைக்கு திரும்பினாலும் அவர்கள் மீண்டும் அன்றைய தினம் வேலைக்கு வருவதில்லையெனவும் இதனால் தாம் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் தொழில் வழங்குனர்கள் தெரிவிக்கின்றனர்.
மின் துண்டிப்பு தொடர்பாக முன்னரே அறிவிக்கப்படுமானால் அது தமது தொழிலுக்கு
பாதிப்பு ஏற்படாது எனவும் அவர்கள் தெரிவிப்பதுடன் மின்சார சபை அதற்கான
நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் தெரிவிக்கின்றனர்
