அம்பாறை மாவட்ட தமிழர்களே சிந்தியுங்கள்…!

அம்பாறை மாவட்ட தமிழர்களே சற்று சிந்தித்துப் பாருங்கள் கடந்த காலத்தில் ஏமாற்று வித்தைக்காரர் ஒருவர் ஜனாதிபதி இணைப்பாளராக களம் இறங்கினான்..

ஒருவர் அவருக்கான குடை பிடித்தவர்களுக்கு தொழில் வாய்ப்பு நிதி வளங்களும் வழங்கப்பட்டது அவர்கள் சொன்னதை நம்பி வாக்களித்தவர்கள் ஏமாந்தார்கள் அதற்குப் பிற்பாடு கிழக்கை மீட்டுத் தருகின்றேன் என்கின்ற ஏமாற்றி வித்தையோடு ஏமாற்றுக்காரர்களை கூட்டுச்சேர்த்து அம்பாறை மாவட்டத்தை மீட்டுத்தருகின்றேன் என்று கூறி ஒருவர் களமிறங்கி அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பிரதிநிதித்துவத்தை இழக்கச் செய்ததோடு அவர்களுக்கு வேலை செய்தவர்களுக்கு கூலி மாத்திரம் வழங்கப்பட்டது

வாக்களித்தவர்களுக்கு ஏமாற்றம் மாத்திரம் கிடைக்கப்பெற்றது இப்போது இன்னொருவர் யாரோ ஒருவர் எழுதிய புத்தகத்தை தனது பெயரில் வெளியிடுகின்றார்

கோட்டாபய ராஜபக்ஷஎம் இனத்தை எவ்வாறு கவனித்ததோ அதே பாணியில் இவரும் எமது மக்களில் அக்கறை செலுத்துகின்றார்

மூன்றாவது தடவையாக அம்பாறை மாவட்டத்தின் வாக்காளரை மைதானமாக பயன்படுத்துவதற்கு அற்ப சொற்ப சலுகைகள் எதிர்பார்த்திருக்கின்ற சில நபர்களை இணைத்துக் கொண்டு இன்னும் இந்த அம்பாறை மாவட்டத்தினுடைய வாக்குகளை சிதறடிப்பதற்காக முனைகின்றார்கள் அபிவிருத்தி இல்லாத பிரதி அமைச்சர் ,அபிவிருத்தி இல்லாத ஜனாதிபதியின் இணைப்பாளர் அபிவிருத்திகள் இல்லாத அமைச்சர் இருந்து என்ன பயன் கல்முனை விடயத்தை அரச சுற்று நிறுவத்தின் படி செய்து முடிக்காமல் இருக்கின்ற நாதியற்ற அரசியல்வாதிகள் எம் இனத்தை இன்னும் ஏமாற்றப் போகின்றார்கள்….

இந்த ஏமாற்றத்தின் காரணத்தினால் அழியப் போவது பிரதிநிதித்துவம் மாத்திரம் அல்ல அம்பாறை மாவட்டத்தின் தமிழ் மக்களின் இருப்பிடங்களும்,நிலவளங்களும் என்பதை மறந்து விடாதீர்கள்…..

சுயலாபத்துக்காக சுய தேவைக்காக என் இனத்தை சிதைக்க வருகின்றவர்களை அவதானமாக கருத்தில் கொண்டு செயல்படுங்கள் உங்களுக்காக செயற்படுபவர்கள் யார் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள் அம்பாறை மாவட்ட மக்கள் ஏமாறுவதற்கு இன்னும் இன்னும் ஏமாறுவதா சிந்தியுங்கள்….

சலுகைக்காக சுய லாபங்களுக்காக செயல்பட்ட எம் இனமா விடுதலைக்காக உயிரயே துச்சமாக மதித்து உடமைகளையும், உயிர்களையும் இழந்து தன்மானத்துக்காக வாழ்கின்ற தமிழர்கள் நாம் அம்பாறை தமிழர்கள் அல்வா..?

சிந்தியுங்கள்..

-கிருஷ்னபிள்ளை ஜெயசிறில் (முன்னாள் தவிசாளர், காரைதீவு