கல்முனைப் வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக நடைமுறைகளுக்கு இடையீடு
செய்ய வேண்டாம் எனவும் தங்களுக்கான அதிகாரங்களை சுயாதீனப்படுத்தக்
கோரியும் தொடங்கப்பட்ட போராட்டத்தின் 21 ஆவது நாளான இன்று கறுப்பு
சித்திரைப் புத்தாண்டு தினமாக மோட்டார் சைக்கிள் ஊர்வலத்துடன் நடத்
தப்பட்டது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு
தீர்வு காணும் நோக்கில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொது
மக்கள் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இதுவரை எந்தவித தீர்வும்
கிடைக்காத நிலையில் உள்ளது.

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு கறுப்பு சித்திரைப் புது வருடமாக இந்தப்
பிரதேச செயலகத்துக்குள் இருக்கும் ஸ்ரீ வர சித்தி விநாயகர் ஆலயத்தின்
முன்பாக பொங்கல் இடம்பெற்றது.

அந்த இடத்தில் ஒருவர் மருத்து நீர் தேய்த்து நீராடியதோடு இது எங்களுடைய மத கடமைஇ அதனால் அதை நிறைவேற்றி இருக்கிறோம். இருந்தா
லும் இது எங்களுக்குக் கறுப்புச் சித்திரை. அதனால் நாங்கள் அதைக்
கொண்டாடப் போவதில்லை என்று கூறியிருந்தனர்.

அந்த இடத்துக்கு வருகை தந்திருந்த கல்முனை பொலிஸார் இந்த நிகழ்
வுகளில் கலந்து கொள்ள வருகை தந்தி ருந்த இளைஞர்களில் தாமோதரம் பிரதீவன், புஷ்பராஜ் துஷாநந்தன், அருள்ஞானமூர்த்தி டிலான்சன் ஆகிய மூவருக்கு நீதிமன்ற தடை உத்தரவை வழங்கினர். அத்துடன் அவர்கள் போராட்ட களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு இருந்தார்கள்.

அதனைத் தொடர்ந்து அந்த இடத்தில் கூடிய இளைஞர்கள் போக்கு
வரத்துக்கு எந்த இடையூறுகளும் இன்றி யாருக்கும் எந்த தொந்தரவுகளோ
தொல்லைகளோ இன்றி மோட்டார் சைக்கிள்களிலே கறுப்பு ஆடைகள்
கறுப்பு கொடிகளுடன் ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.

பிரதேச செயலகத்தின் முன்பாக ஆரம்பமாகி நற்பிட்டிமுனை. சேனைக்குடியிருப்பு, துரைவந்தியமேடு, பெரியநீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு
ஊடாக கல்முனை ஸ்ரீ தரவைச் சித்திவிநாயகர் ஆலயத்துக்குச் சென்று
அங்கிருந்து மீண்டும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை வந்தடைந்தனர்.

இதன்போது ஊர்வலத்தில் ஈடுபட்டவர்கள் தமிழர் கலாசார முறைப்படி
பறை இசைத்து வரவேற்கப்பட்டனர்.

பிரதேச செயலகத்தின் முன்பாக அழைத்துவரப்பட்டு ஆலயத்திலே
பூசை வழிபாடுகளில் அனைவரும் ஈடுபட்டு அதனைத் தொடர்ந்து போராட்
டம் தொடரப்பட்டது.

https://m.facebook.com/story.php?story_fbid=957537862199499&id=100063609998845&sfnsn=wa&mibextid=RUbZ1f