அரசு இனியும் மௌனிக்குமா? தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து முயற்சிக்குமா?

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கெதிரான அதிகார பயங்கரவாதத்தை கண்டித்து அனைத்து சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் அமைதிப்போராட்டம் இன்று (01.04.2024) எட்டாவது நாளாகவும் தொடர்கிறது.

இதில் பெருமளவான பொதுமக்கள் மதகுருக்கள் அரசியல் பிரமுகர்கள் பங்குபற்றி கல்முனை வடக்கு பிரதேச மக்களின் நியாயமான கோரிக்கைக்கு தங்கள் ஆதரவை வழங்கி வருகின்றனர்.

இன்றைய தினமும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான தவராசா கலையரசன் சிவஞானம் சிறிதரன் ஆகியோர் நாடாளுமன்ன அமர்வில் பேசியிருந்தார்கள்… அரசு காலம் தாழ்த்தாது உரிய தீர்வை தர வேண்டும் மக்கள் கேட்பது இயங்கிக்கொண்டிருக்கும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஊடாக அரச சேவைகளை வினைத்திறனாக பெறுவதற்கு திட்டமிட்ட அதிகார அத்துமீறலுக்கு இடமளிக்க கூடாது என்பதே. இதற்கென தனியான கணக்காளர் உடன் நியமிக்கப்பட வேண்டும்.