வெடுக்குநாறிமலை வழிபாட்டுக்கு இடையூறு : மட்டக்களப்பில் இடம்பெற்ற கவன ஈர்ப்பு போராட்டம்!

வெடுக்குநாறி சிவன் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று பக்தர்கள் வழிபாடு செய்ய பொலிசார் இடையூறு செய்தமைக்கு கண்டனம் தெரிவித்து கவன ஈர்ப்பு போராட்டம் இடம் பெற்றது.
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று இடம் பெற்ற இந்தப் போராட்டத்தில் பெருந்திரளான பொதுமக்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மதத் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் ( ஜனா), முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன் பா.அரியநேத்திரன், சீ. யோகேஸ்வரன் தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்களான மா.உதயகுமார் ,மா.நடராஜா,முன்னாள் மாநகர முதல்வர் தி.சரவணபவான் அத்துடன் தர்மலிங்கம் சுரேஸ் , இரா.துரைரெட்ணம்  ,பெண்கள் அமைப்புக்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வெடுக்குநாறி மலை ஆலயத்தில் இடம் பெற்ற சம்பவமானது உலகத் தமிழ் மக்களிடையே கடும் கண்டணத்தை ஏற்படுத்தியுள்ளது.